Tuesday, December 15, 2015

Free = cheating - Tamil story

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.
இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி...
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.
அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பி இருப்பார்கள்'' என்று கண்டு பிடித்திருப்பீர்களே...!''என்று எழுதியிருந்ததைப் பார்த்த உடன் கத்தினர்.
ஐயோ...! ''களவாணிப்பயலா'' அவன்....? என்று....

நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலூம் அது கொள்ளை அடிப்பதர்க்கே உலகில் எதுவும் இலவசம் இல்லை காற்றை தவிர மரம் இருக்கும் வரை

No comments:

Post a Comment